Casual questions and cool answers :
1. தசமபாகம் கொடுக்கவில்லை என்றால் மருத்துவமனைச் செலவு வருமா?
- வராது, அன்பினிமித்தம் காணிக்கை கொடுப்பதே நன்று. கர்த்தர் மிரட்டி பணம் பறிப்பவர் அல்ல.
2. சண்டே தேர்வு எழுதப் போனால் ஃபெயில் ஆகி விடுவார்களா?
- நன்றாகப் படித்தால், தேவனே வாய்க்கச் செய்வார். குதிரை யுத்தநாளுக்காக ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும்.
3. வெள்ளைச் சட்டை போடாமல் சர்ச்சுக்கு வந்தால் பரலோகம் போக முடியாதா?
- உங்களுக்குப் பிடித்திருந்தால் போடுங்கள். யாரும் கட்டாயப் படுத்தக் கூடாது. அதற்கும் பரலோகம் போவதற்கும் சம்பந்தம் இல்லை.
4. காதல் திருமணம் பாவமா?
- தேவனை விட்டு தூரம் போகாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் சரி. நூறு முறை யோசிக்கலாம், ஆயிரம் முறை ஆலோசனை கேட்கலாம், முடிவு உங்கள் கையில் (குறிப்பு : காதலித்துவிட்டு உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது, அதற்கு காதலிக்காமல் காத்திருப்பதே சிறந்தது)
5. ஊழியக்காரர்கள் தவறு செய்தால் வாய் திறந்து சுட்டிக்காட்டக் கூடாதா?
- தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டும். மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும் பிரச்சனை என்றால் மற்றவைகளை எச்சரிக்கை செய்வதே நியாயம்.
6. அடுத்த கேள்வி என்னவென்றால்...
#Stop #I_am_not_prepared_to_answer_you #You_are_anti_indian