சத்தியம் ஒன்றிருக்க, ஒரே மனிதன் ஆதாம் அதை மீறிவிட்டான். சத்தியம் மாறவில்லை, அது தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை.
சத்தியம் ஒன்றிருக்க, ஒரே மனிதன் நோவா அதற்காக நின்றான். முழு உலகமும் எதிர்த்தபோதும் சத்தியம் மாறவில்லை, அது தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை.
சத்தியம் ஒன்றிருக்க, ஒரே மனிதன் லோத்து அதற்காக நின்றான். முழு ஊரே எதிர்த்து நின்றாலும் சத்தியம் மாறவில்லை, அது தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை.
சத்தியம் ஒன்றிருக்க, ஒரே ஒரு யோசேப்பு அதற்காக நின்றான். அனைத்து சகோதரரும் எதிர்த்து நின்றார்கள்.. ஆனாலும்..
ஒரே ஒரு தானியேல் அதற்காக நின்றான்.. அனனியா, அசரியா, மிஷாவேல் அதற்காக நின்றார்கள்.. ஆனாலும்..
ஒரே ஒரு மொர்தெகாய் அதற்காக நின்றான்.. ஊரெல்லாம் மனிதனை வணங்க, தானொருவனாய் எதிர்த்து நின்றான்.. ஆனாலும்..
வனாந்திரத்திலிருந்து ஒருவனாய், சத்தியத்திற்காக வந்தான் யோவான் ஸ்நானன்.. மொத்த யூதரும் மறுபக்கம்.. ஆனாலும்..
இயேசு ஒருவராய் நின்றார். மொத்த பரிசேய, சதுசேய, வேதபாரகக் கூட்டம் மறுபக்கம்.. ஆனாலும்..
ஆனாலும் ஒரு நாளும் சத்தியம் தான் மைனாரிட்டி ஆகிறோம் என்று தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருவனாய் அதன் பக்கம் நின்றவன் எவனும் வெட்கப்பட்டுப் போகவுமில்ல.
கூட்டம் குறையவும், கட்சி மாற அது பொய் இல்லை. சத்தியம். ஒருவன் அல்ல, ஒருவனுமே இல்லை என்றாலும் சத்தியம் மாறாது! நம் தேவன் மாறாதவர்!