போலிகளும் காலிகளும் ஆடும் பொம்மலாட்டம்
எதற்கு இந்த பைபிள் ஆராய்ச்சி, ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் எல்லாம். நூற்றுக்கணக்கான நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களிடம் படித்து எழுதப்படும் புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் சிலரால் கூட விரும்பப்படுவதில்லை.
ஆனால் ஒரு கீபோர்ட், கிட்டார் விகுப்பு யாராவது எடுத்தாலோ, அல்லது ஏதாவது நல்ல இயற்கைக்காட்சி விடியோவுடன் கிறிஸ்தவ பாடல்கள் வெளியிட்டாலோ அது மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி விடுகிறது.
நானும் என் நண்பன் ரூபன்-ம் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான நூல்களைத் தேடித் தேடி வாங்கிப் படித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. இதற்கென்று நாங்கள் மாதம் ஒரு தொகையை ஒதுக்கிவிடுவதுண்டு. இன்றைக்கு இருக்கும் தலைமுறை வெளிப்புற பகட்டையும், கிறிஸ்தவ ஆராதனை என்னும் பெயரில் நடக்கும் மேடை நாடகத்தையும் அதிகம் விரும்புகிறது. வேத ஆராய்ச்சி, நூல்கள், முற்பிதாக்களின் சாட்சிகள் இவற்றைப்பற்றி ஒருவருக்கும் கவலையில்லை.
உண்மையான தரம் நம் படிப்பதிலும், கற்றுக்கொள்வதிலும் இருக்கிறது மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொண்டாள். உண்மையான தரமான விசுவாச சந்ததி உருவாக பெரும் அளவு ஆழமான கற்றல் அவசியமாக இருக்கிறது. போதுமான கற்றல் இல்லாததன் விளைவே, போலிகலும் காலிகளும் ஆடும் பொம்மலாட்டத்தில் விசுவாசிகளை விழவைத்து மாயைக்குள் தக்கவைத்துக் கொள்கிறது.
Well said Bro..
ReplyDeletePraise the Lord bro
Delete