Tuesday, June 21, 2022

பாவம் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தையில் மனித ஞானம் கலக்கப்படுகிறதா?

பாவம் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தையில் மனித ஞானம் கலக்கப்படுகிறதா?


தேவன் நமக்கு விலக்கி வைத்த அனைத்தும் பாவம் தான். உதாரணம், ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே அது பாவம். ஆனால் சிலர் பாவத்திற்கு விளக்கம் என சொல்லி, நியாயப்பிரமாணம் பற்றி பேசி குழப்பிகொண்டிருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டு வேதாகமத்தை அறியாத ஒருவனுக்கு கூட புரியும் வகையில் பாவம் என்றால் என்ன என்பதை இயேசு விளக்கியிருக்கிறார். 


பாவம் என்பதை உள்ளபடி சரியாகவும், அதன் பரிகாரி இயேசு என்பதை அதை விட அழுத்தமாகவும் சொல்வதே நம் ஆண்டவரின் பிரசங்கம்.


நியாயப்பிரமாணம் பற்றியெல்லாம் வேதாகமம் அறியாத யாருக்கும் தெரியாது. ஆனால் பாவம் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். யூதர்கள் மத்தியில் செய்த ஊழியத்தை, அவர்களுக்கு புரிகிறபடி பேசிய வசனத்தை, சுவிசேஷம் என்ற பெயரில் அனைத்து மக்களுக்கும் பிரசிங்கிப்பதில் சுவிசேஷம் இருப்பதாகத் தெரியவில்லை.


பாவம் என்பது, நியாயப்பிரமாணத்தோடு தொடர்புடையது போல் சித்தரிப்பது, உண்மையில் தேவன் கூடாது என்று சொல்லும் பாவங்களை நீர்க்கச் செய்யும் வேலையாகவே தெரிகிறது.


உங்கள் அறிவையும், தத்துவ ஞானம் சார்ந்த பிரசங்கதையும் (Philosophical wisdom), இயேசு பிரசங்கம் செய்தவற்றை, அவர் பிரசங்கம் செய்ய சொன்னவற்றை பிரசங்கம் செய்ய பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். சமநிலை தவறுவதும், சத்தியத்தை மறைப்பதும் தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 


தத்துவ ஞானம் சார்ந்து இங்கே பலராலும் பேச முடியும், ஆனால் அதை ஒரு அளவுக்கு மேல் பேசுவது களங்கமற்ற திருவசனத்தின் ஆழத்தை குறைத்துவிட வாய்ப்புள்ளது. தேவனுடைய சுவிசேஷததை பிரசங்கிப்பவர்கள், தங்களுடைய பேச்சுத் திறமையையும், ஞானத்தையும் பிரதிபலிக்க, வசனத்தை பக்கபலமாக பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.


- முகில்.

No comments:

Post a Comment